ஒரே நாளில் 2 அமைச்சர்கள்… அதிமுகவை அழிக்கவே திமுக செயல்படுகிறது – ஜெயக்குமார் கண்டனம்!!

கடந்த சில நாட்களாகவே முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் வீட்டில் இன்று காலை முதலில் இருந்தே லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனை கண்டிக்கும் விதமாக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில்: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்வதை விட, விளம்பர அரசியல் செய்து கொண்டு காவல்துறையை ஏவி விடுவதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் அதிமுகவை அழிக்கவேண்டும் என்ற நோக்கத்துடனே திமுக அரசு இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார். அதேபோல் மின் கட்டண உயர்வு குறித்து ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கும் நிலையில், மக்களை திசை திருப்பவே இத்தகைய சோதனை நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால், அதிமுக சார்பில் நீதிமன்றத்தை நாட இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment