திமுக அரசு அம்மா உணவகத்தை மூட பல்வேறு வழிகளில் முயற்சி!: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்;

தமிழகத்தின் இரும்பு பெண்மணி, மக்களால் அம்மா என்று அழைக்கப்பட்டு காணப்பட்டவர் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா. இந்த நிலையில் ஜெயலலிதாவின் ஆட்சியில் தமிழகத்தில் ஏராளமான நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

palaniswai

அதிலும் குறிப்பாக அம்மா உணவகம் என்ற திட்டம் ஏழை, எளிய மக்களுக்கு மிகவும் பயனளிக்கும் வகையில் காணப்பட்டது. இதனால் தற்போதைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலும் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அம்மா உணவகம் தொடர்ந்து செயல்பட்டு வந்தாலும் அதை மூடுவதற்கு திமுக அரசு பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலத்தில் நலத்திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து இவ்வாறு பேட்டியளித்தார். அதன்படி திராவிட முன்னேற்ற கழகத்தின் அரசு அம்மா உணவகத்தை முடக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முதலில் அம்மா உணவகத்தில் பொருட்களை குறைத்து மூடுவதற்கு வழிவகுத்தனர் என்றும் அதன் பின்னர் அம்மா உணவகத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து அம்மா உணவகத்தை மூடுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் முயற்சி செய்தது என்றும் கூறினார்.

மூன்றாவதாக அம்மா உணவகத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் ஊதியத்தை குறைத்தும் அம்மா உணவகத்தை மூடும் முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது என்று கூறினார். அம்மா உணவகத்தை முயற்சி செய்வதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி  பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment