தமிழகமெங்கும் உள்ள மாணவ மாணவிகளின் மருத்துவ படிப்பிற்கு பெரும் தடையாக அமைந்துள்ளது நீட்தேர்வு. இதற்காக நீட் விலக்கு மசோதா சட்டப் பேரவையில் தாக்கல் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. ஏனென்றால் இதற்கு முன்னதாக ஆளுநருக்கு அனுப்பி இருந்த நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் மாளிகையில் இருந்து மீண்டும் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தநிலையில் நீட் தேர்வு வந்ததற்கு திமுக தான் முழுப் பொறுப்பு என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அதன்படி நீட்தேர்வு வந்ததற்கு திமுக அரசுதான் முழு பொறுப்பு என்றும் இதற்கான ஆதாரம் தங்களிடம் வலுவாக இருக்கிறது என்றும் அதிமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
திமுக அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் ஆட்சியில் 2010 டிசம்பர் 26 ஆம் தேதியில் நீட் கட்டாயம் அறிக்கை வெளியானது என்றும் ஓபிஎஸ் கூறினார். நீட் தேர்வுக்கு மூலகாரணம் திமுகவும் காங்கிரசும் தான் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து கிடையாது என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
அதிமுக ஒருபோதும் நுழைவுத் தேர்வையோ அல்லது நீட்தேர்வையோ ஆதரித்தது இல்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாதபோது திமுக ஆட்சியில் நீட்தேர்வு எங்கே நடந்தது எனக் கூறுவது சிறுபிள்ளைத் தனமானது என்று பன்னீர்செல்வம் கூறினார்.
நீட் தேர்வு தொடர்பாக நீட் என்ன? வழக்கைத் தொடுத்தது எங்கே? தொடுத்தது வழக்கு எண் என்ன? பன்னீர்செல்வம் கேள்வி கேட்டார். நீட் விவகாரத்தில் மனம் போன போக்கில் திமுக தலைவர் பேச வேண்டாம் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.