Connect with us

கூட்டணி இல்லாமல் போட்டியிட முடியாத கட்சி திமுக! உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறவர்களுக்கு எதற்கு கட்சி?

திமுக

தமிழகம்

கூட்டணி இல்லாமல் போட்டியிட முடியாத கட்சி திமுக! உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறவர்களுக்கு எதற்கு கட்சி?

கூட்டணி இல்லாமல் போட்டியிட முடியாத கட்சி திமுக! உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறவர்களுக்கு எதற்கு கட்சி?

தமிழகத்தில் தேர்தல் பரப்புரை அதிதீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக தேர்தல் பரப்புரை நடத்துகிறார். இன்று அவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.

அதேவேளையில் தமிழகத்தின் வலிமையான எதிர்க்கட்சியான அதிமுக நேரடியாக களத்தில் சென்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.

அப்போது தனித்துப் போட்டியிட முடியாத கட்சி திமுக என்று விமர்சனம் செய்துள்ளார். கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டு வெற்றிபெற முடியாத கட்சி திமுக என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

திமுக கூட்டணி கட்சிகள் திமுக சின்னத்தில் போட்டியிடுகின்றன், அவர்களுக்கு எதற்கு கட்சி என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். பாஜகவுக்கு அதிமுக டப்பிங் பேசுகிறது என்கிறார்கள், ஆனால் நாங்கள் நேரடியாக தேர்தலை எதிர் கொள்கிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு தேர்தல் பரப்புரையிலும் திமுகவின் பேச்சுவார்த்தைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top