திமுக ஆன்மீக அரசு என்பதை விட யாருக்கும் அடி பணியாத அரசு; அமைச்சர் சேகர் பாபு !!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னையில் செய்தியாளர்களிடம் சந்தித்து கூறியதாவது: தமிழுக்கு ஒரு சோதனை வருகின்றது என்றால் அது சைவத்திற்கு வருகின்ற சோதனை என்றும் திமுக அரசு தமிழையும் காக்கும் சைவத்தையும் காக்கும் என கூறினார்.

அந்த வகையில் பட்டின பிரவேசம் என்பது 1500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து தொடங்கி நடைபெற்று வருவதாகவும் பல்வேறு இடங்களில் பட்டினப்பிரவேசம் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறினர்.

தர்மபுரி ஆதீனத்தை பொறுத்த வரையில் இந்த ஆண்டு பட்டினப்பிரவேசம் நடைபெற வேண்டும் என்று அனைத்து ஏற்பாடுகளும் செய்த நிலையில் வருவாய் அலுவலகத்திலிருந்து தடை விதிக்கப்பட்டதால் இந்த விவகாரம் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறைக்கு ஈர்க்கப்பட்டது.

இந்நிலையில் உடனடியாக தமிழக முதல்வரை பார்க்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாகவும் குறிப்பாக நேற்றைய தினத்தில் தமிழக முதல்வர் ஓர் ஆண்டு கொண்டாட்டத்தில் இருந்ததால் யாரும் மனம் வருந்தக் கூடாது என்பதற்காக நேற்றைய தினத்தில் அவர்களை வரவழைத்து அவர்களுக்கு நற்செய்தி கூறியதாக தெரிவித்தார்.

மேலும், திமுக அரசு ஆன்மீக அரசு என்பதைவிட யாருக்கும் அடிபணியாத அரசு என அமைச்சர் சேகர் பாபு கூறியது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment