திமுக உட்கட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடக்கம்!!

திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.

திமுகவின் 15-ஆவது உட்கட்சி தேர்தல் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், இன்று முதல் மாவட்ட செயலாளர், மாவட்ட அவைத்தலைவர் உள்ளிட்ட பதவிக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

இந்நிலையில் தென் மாவட்டங்களில் இருக்கக்கூடிய  கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல்,தேனி மதுரை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் நிர்வாகிகள் நேரில் வந்து வேட்புமனுக்களை தாக்கல் செய்கின்றனர்.

இதனிடையே திமுக-வை பொறுத்தவரையில் அமைப்பு ரீதியாக 77 மாவட்ட செயலாளர்கள் இருந்த நிலையில், தற்போது 72 செயலாளர்கள் மட்டுமே போட்டியிடுகின்றனர்.

மேலும், வருகின்ற 25-ம் தேதி தேர்தல் நடைப்பெற இருப்பதாகவும், ஒரு சில செயலாளர்களை மாற்றுவதர்கு திமுக ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.