Connect with us

6 சுயேட்சைகளின் ஆதரவு- நகராட்சியை தன்வசமாக இழுத்துக் கொண்ட திமுக!

திமுக

செய்திகள்

6 சுயேட்சைகளின் ஆதரவு- நகராட்சியை தன்வசமாக இழுத்துக் கொண்ட திமுக!

6 சுயேட்சைகளின் ஆதரவு- நகராட்சியை தன்வசமாக இழுத்துக் கொண்ட திமுக!

பிப்ரவரி 19-ஆம் தேதி நம் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. பிப்ரவரி 21ம் தேதி ஒரு சில வார்டுகளில் மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டன.

அதில் பெரும்பாலான இடங்களில் ஆளும் கட்சியான திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகள் திமுக வசம் ஆகி உள்ளது. அதுவும் குறிப்பாக அதிமுகவின் கோட்டையாக கருதப்படுகின்ற கோவை மாநகராட்சி இந்த முறை திமுகவுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது சுயேச்சைகளின் ஆதரவால் நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சியை சுயேச்சை வேட்பாளர்கள் ஆதரவால் திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றியுள்ளது.

வந்தவாசி நகராட்சியில் மொத்தம் உள்ள 24 வார்டுகளில் திமுக 9 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற 10 பேரில் 6 பேர் ஆதரவு தந்தால் நகர் ஆட்சியை கைப்பற்றியுள்ளது திமுக.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top