Connect with us

திமுகவிற்கு சனி பிடித்துவிட்டது, இந்து முன்னணி தலைவர் ஆவேசம்!

ARaja DMK

தமிழகம்

திமுகவிற்கு சனி பிடித்துவிட்டது, இந்து முன்னணி தலைவர் ஆவேசம்!

இந்து முன்னணி சார்பாக நீலகிரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து மேற்கொள்ளவுள்ள போராட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் அவிநாசியில் நடைபெற்றது. அதில் செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது:

திமுகவிற்கு சனி திசை நடக்கிறது.  அந்த சனி திசை ஆ.ராசாவின் மூலம் நடந்து கொண்டிருக்கிறது. வெளிநாட்டில் இருந்து ஏதோ ஒரு ஆதாயம் ஆ.ராசாவிற்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. திமுக கட்சியை அழிக்க வேண்டும் என்று பிரிவினைவாதத்தையும் மத துவேசத்தையும் பேசி வருகிறார். இந்து என்றால் சூத்திரன் என்றால் வேசி மகன் என்று அவர் பேசி உள்ளார்.

அவரது தலைவர் வீட்டில் சொந்த ஊரில் சிறப்பாக கோவில் கும்பாபிஷேகம் செய்துள்ளனர். தலைவரின் உறவினர்கள் தலைவர் நன்றாக இருக்க வேண்டும் என்று யாகங்கள் செய்துள்ளனர். அவரது தலைவர் வீட்டில் தொடர்ந்து இந்து கலாச்சாரங்களையும் பாரம்பரியம் கடைபிடித்து வருகின்றனர். .ராசாவை ஆதரித்து திமுகவின் கூட்டணி கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

.ராசா நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஆங்கிலேயர்களால் மொழிபெயர்க்கப்பட்ட கருத்தை வைத்து கூறி வருகின்றனர். வேறு யாரோ மொழிபெயர்த்ததை வைத்து பேசி வருகின்றனர். தமிழ்நாட்டில் கலவரத்தை உண்டு செய்வதற்கு பின்னால் ராசா உள்ளார். தமிழக முதலமைச்சர் ஆ.ராசா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வருகின்ற காலங்களில் திமுக அரசாங்கம் காணாமல் போய்விடும்.

இப்பொழுது உள்ள அரசாங்கம் மதச்சார்பின்மை அரசாங்கம் என்கிறார்கள் இதுபோன்ற இந்துக்களுக்கு விரோதமாக பேசுபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். வருகின்ற  20-ம் தேதி செவ்வாய்க்கிழமை ஆ.ராசாவின் பேச்சை கண்டித்து நீலகிரி நாடாளுமன்ற தொகுதி முழுவதும் இந்து முன்னணி தலைமையில் கடையடைப்பு நடைபெற உள்ளது.

நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அவிநாசி, திருமுருகன்பூண்டி பகுதிகளிலும் கடை அடைப்பு நடைபெறும். இந்த போராட்டத்தில் வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top