மாநிலங்களவைத் தேர்தல்: காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம்!! திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!!

சட்டமன்ற தேர்தலின் வெற்றியின் விளைவாக மாநிலங்களவை தேர்தலிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி தொடர்வதாக தெரிகிறது. இந்த நிலையில் மாநிலங்களவைத் தேர்தலுக்கு காங்கிரஸ்க்கு திமுக சார்பில் இருந்து ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கியது. திமுக தமிழ்நாட்டில் 6 மாநிலங்களில் உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாநிலங்களவை  மூன்று இடங்களில் போட்டியிடும்  திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சை  கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகியோர் மாநிலங்களவை தேர்தலில்  போட்டியிட உள்ளனர். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கல்யாணசுந்தரம் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக உள்ளார். மாநிலங்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் வெளியிட்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment