Connect with us

விசிக கொண்டாடியதில் தப்பே இல்லை…!!! கடலூர் துணை மேயர் பதவியை கொடுத்த திமுக!

cuddalore corporation

Tamil Nadu

விசிக கொண்டாடியதில் தப்பே இல்லை…!!! கடலூர் துணை மேயர் பதவியை கொடுத்த திமுக!

விசிக கொண்டாடியதில் தப்பே இல்லை…!!! கடலூர் துணை மேயர் பதவியை கொடுத்த திமுக!

தற்போது திமுக கூட்டணி கட்சிகளுக்கான இடப்பங்கீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என வரிசையாக திமுக கூட்டணிக்கு பதவி பங்கீட்டை அறிவித்து வந்தது.

அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே நெல்லிக்குப்பம் நகராட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கான பதவி ஒதுக்கீடு குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி கடலூர் மாவட்ட மாநகராட்சி துணை மேயர் பதவி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஜெயங்கொண்டம், நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவிகளும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திண்டிவனம், பெரியகுளம், ராணிப்பேட்டை நகராட்சி துணைத் தலைவர் பதவிகளும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பெண்ணாடம், கடையம்பட்டி, பொ.மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் பதவிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடத்தூர், திருப்போரூர், புவனகிரி உள்ளிட்ட 7 பேர் ஊராட்சி துணை தலைவர் பதவிகளும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top