Connect with us

மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம்: திமுக முன்னிலை

திமுக

தமிழகம்

மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம்: திமுக முன்னிலை

மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம்: திமுக முன்னிலை

நடைபெற்று முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களில் திமுக முன்னிலை வகித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 ஆகிய இரண்டு நாட்கள் நடந்த 9 மாவட்டங்களுக்கான ஊராட்சி ஒன்றிய தேர்தலில் ஒன்றிய ஊராட்சி வேட்பாளர்கள் 6 பேர் முன்னிலை வகித்து வருகின்றார்கள் என்பதும் இவர்கள் 6 பேரும் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன

மேலும் மாவட்ட ஊராட்சி தேர்தலில் 10 திமுக வேட்பாளர்கள் ஊராட்சி ஒன்றியம் தேர்தலில் 13 திமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வருகின்றனர். மாவட்ட ஊராட்சி தேர்தலில் ஒரே ஒரு அதிமுக வேட்பாளர் மட்டும் முன்னிலை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

கள்ளக்குறிச்சி தொகுதியில் 2 திமுக மாவட்ட கவுன்சிலர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வந்திருக்கும் முன்னிலை தகவலின்படி தென்காசி மாவட்டத்தில் திமுகவை சேர்ந்த ஒரு ஒன்றிய கவுன்சிலர் முன்னிலை வகித்து வருகிறார் என்றும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூன்று மாவட்ட கவுன்சிலர் திமுகவை சேர்ந்தவர்கள் முன்னிலையில் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

பெரும்பாலான மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்களாக திமுகவினர் முன்னிலை வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top