Connect with us

கூட்டணி தந்த பதவிக்கு ஆசைப்படுவதா? பதவியை விட்டுக்கொடுக்க மறுக்கும் திமுக நிர்வாகிகள்! கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!!

திமுக

தமிழகம்

கூட்டணி தந்த பதவிக்கு ஆசைப்படுவதா? பதவியை விட்டுக்கொடுக்க மறுக்கும் திமுக நிர்வாகிகள்! கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!!

கூட்டணி தந்த பதவிக்கு ஆசைப்படுவதா? பதவியை விட்டுக்கொடுக்க மறுக்கும் திமுக நிர்வாகிகள்! கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!!

இவரது 22ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. அதன் பின்னர் மார்ச் 4 ஆம் தேதி வெற்றி பெற்ற வேட்பாளர்கிடையே மறைமுக தேர்தல் நடைபெற்றது.

இந்த மறைமுக தேர்தல் மேயர் மற்றும் நகர்மன்றத் தலைவர் பதவிக்கான தேர்தல்க்கான அமைந்தது. மார்ச் 4ஆம் தேதி திமுக கூட்டணி கட்சிக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது. ஏனென்றால் திமுக கூட்டணி கட்சிக்கு எதிராக திமுக வேட்பாளர்கள் களம் இறங்கி பல இடங்களில் தலைவர் பதவியையும் கைப்பற்றினர்.

இதனால் அன்று மாலையே தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்றும் கூறியிருந்தார்.

இதன் ஒரு கட்டமாக வரிசையாக தங்கள் பதவிகளை திமுக உறுப்பினர்கள் ராஜினாமா செய்து வந்தனர். இருப்பினும் ஒரு சில இடங்களில் சில வேட்பாளர்கள் பதவியை ராஜினாமா செய்ய மறுக்கின்றனர்.

இதனால் அவர்கள் கட்சியில் இருந்து உடனடியாக படுக்கின்றனர். அந்த படி தற்போது திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சின்னசேலம் பேரூராட்சி செயலாளர் செந்தில்குமார் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளார் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அளித்துள்ளார்.

தர்மபுரி மல்லாபுரம் பேரூராட்சி செயலாளர் உதயகுமார், ஆனந்தன், மோகன் குமார் உள்ளிட்டோரும் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். திமுக துணைச் செயலாளர் ராமச்சந்திரன் ஒன்றிய இளைஞரணி நிர்வாகி ராஜதுரை உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கூட்டணி கட்சிகளுக்கு பதவியை விட்டுக் கொடுக்காமல் இருந்ததாக திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top