திமுக நிர்வாகிகள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு..!!

திமுகவில் அமைப்பு ரீதியாக எடுக்ககூடிய அனைத்து நிர்வாகிகளின் கூட்டம் வருகின்ற 24-ம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைப்பெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

திமுகவை பொறுத்தவரையில் சமீபத்தில் உட்கட்சி தேர்தல் நடைப்பெற்றது. இதில் ஒவ்வொரு அணிக்கும் தலைவர், மாவட்ட செயலாளர், இளைஞர் அணி, மகளிர் அணி உள்ளிட்ட 23 அணிகள் உள்ளனர்.

50 பைசாவிற்கு பால் பாக்கெட்: அலைமோதிய கூட்டத்தினால் பரபரப்பு..!!

இவர்கள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார். இந்த கூட்டத்தில் வருகின்ற 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக நிர்வாகிகள் தயாராகுவது குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

அதே போல் இந்த கூட்டத்தினை தமிழக முதல்வர், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறும் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே மாவட்ட செயலாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களோடு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.