பழிவாங்கும் நோக்கத்தில் விடியா அரசு செயல்படுகிறது: இபிஎஸ் டுவிட்!!

இன்றைய தினமானது அதிமுகவை பொறுத்த வரையில் முக்கிய தினமாகவே கருதப்படுகிறது. குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கருக்கு சொந்தமான 23 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரித்து போராடிய அம்மன் அர்ஜுனன், பி ஆர் ஜி அருண்குமார், கே ஆர் ஜெயராமன், அமுல் கந்தசாமி,விபி கந்தசாமி, ஏகே செல்வராஜ் உட்பட 7 அதிமுக எல்.ஏ-க்கள் போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் சர்வாதிகார போக்குடன் கைது செய்வதை வன்மையாக கண்டிப்பதகவும், கைது செய்யப்பட்டுள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

அதே போல் மின்கட்டண உயர்வால் அரசின் மீது ஏற்பட்டிருக்கும் மக்கள் எதிர்ப்பை திசை திருப்ப வேண்டும் எனற நோக்கத்துடன் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்த திமுக தூண்டிவிட்டதாக கூறியுள்ளார்.

இத்தகைய திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் செயலை கண்டிக்கத்தாக அமைந்துள்ளதுள்ளதாக இபிஎஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment