டிசம்பர் 1-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!!

வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திமுகவை பொறுத்தவரையில் அமைப்பு ரீதியாக 72 மாவட்ட செயலாலர்களும் டிசம்பர் 1-ம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம் வரவேண்டும் என திமுக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.

தேங்காய் பறிக்க அழைத்து சென்ற ஐ.டி.ஐ. மாணவன் – மின்சாரம் தாக்கி பலி!!

இந்த கூட்டத்தில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா குறித்து விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. அதே போல் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் டிசம்பர் 1ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 72 மாவட்ட செயலாலர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்படும் என தெரிகிறது.

கனமழை! பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1,000 – அரசாணை வெளியீடு!

மேலும், அன்றைய தினத்தில் முக்கிய அதிகாரிகள், அமைச்சர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.