Connect with us

வெற்றியை நோக்கி திமுக-காங்கிரஸ், இழுப்பறியை நோக்கி அதிமுக-பாஜக!

Tamil Nadu

வெற்றியை நோக்கி திமுக-காங்கிரஸ், இழுப்பறியை நோக்கி அதிமுக-பாஜக!

d6c72db96150c15beebf9c642a8abec7-1

ஒரு பக்கம் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தையும் இன்னொரு பக்கம் பாஜக மற்றும் அதிமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் சற்று முன் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து இறுதி முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் இதுகுறித்த எண்ணிக்கை தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறினார்

ab4c83ba280534660d21a52b195273cf

மேலும் திமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை வெற்றி அடைந்ததாகவும் அவர் தெரிவித்தார். திமுகவுடன் காங்கிரஸ் தொகுதி உடன்பாடு ஒரு பக்கம் வெற்றி பெற்றதை அடுத்து இன்னொரு பக்கம் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறியில் இருப்பதாக கூறப்படுகிறது

பாஜக கேட்கும் தொகுதிகளை அதிமுக தர மறுப்பதாகவும் குறிப்பாக அமமுகவை இணைத்துக்கொள்ள பாஜக வலியுறுத்துவதில் அதிமுகவுக்கு உடன்பாடு இல்லை என்றும் கூறப்படுகிறது. எனவே பாஜக சற்றுமுன் தலைமை அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top