அதிமுக கோட்டையை தகர்த்த ஒற்றை பெண்! திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அதுவும் குறிப்பாக இன்றைய தினம் மாலை இறுதி கட்ட வேட்பாளர் மற்றும் சின்னங்கள் ஒதுக்கீடு அறிவிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியாகாத நிலையில் ஆங்காங்கே வெற்றிபெற்ற வேட்பாளர்களின் பட்டியல் மெல்லமெல்ல அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மற்றுமொரு திமுக வேட்பாளர் போட்டியின்றி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதிமுக வேட்பாளர் காஞ்சனா அதிமுக வேட்பாளர்கள், அதிமுக  மாற்று வேட்பாளர் கலா, சுயேச்சை வேட்பாளர் சங்கீதாவின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் திமுக வேட்பாளர் விஜயலட்சுமி போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.

ஏனென்றால் அதிமுக வேட்பாளர்கள் இருவரும் மாநகராட்சியில் காய்கறி கடையை நடத்தி வந்ததால் அவர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேஸ்வரி, சுயேச்சை வேட்பாளர் திவ்ய பாரதி ஆகியோர் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர்.

ஈரோடு அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகம் உள்ள மாவட்டமாக இருந்தாலும் அங்கு திமுக வேட்பாளர் போட்டியின்றி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்வாகியுள்ளது திமுக மத்தியில் பெரும் ஆனந்தத்தை அளித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment