
தமிழகம்
பழைய பழனிசாமி என நினைத்தீர்களா?- EPS-க்கு திமுக சரமாரி கேள்வி!!
பழைய பழனிசாமி என நினைத்தீர்களா? அது நடக்காது ஸ்டாலின் அவர்களே என கூறியதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்தும், அதே நேரத்தில் சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலம் முன்பு ஏற்பட்ட கலவரத்தை சுட்டிக்காட்டி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இவற்றில் அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்தே திமுகவிற்கு பல்வேறுவிதமான தொந்தரவு கொடுத்து வந்ததாகவும், பழைய நிகழ்வுகளை சுட்டிக்காட்டி அதிமுக தொடர்ந்து திமுகவை எதிர்த்து வருவதாக கூறியுள்ளார்.
அதே போல் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ சோதனை போன்ற ஒன்றிய அரசின் நடவடிக்கைகளுக்கு இபிஎஸ் தற்போது கேள்வியெழுப்ப தயாரா என்று ஆர்.எஸ் பாரதி சரமாரி கேள்வியெழுப்பியுள்ளார்.
இதனை தொடர்ந்து கோவை சந்திரசேகர் அருப்புக்கோட்டை செய்யாதுரைக்கு சொந்தமான இடங்களில் ரூ.500 கோடி கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்ட இடத்தில் இவர்கள் யார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
