News
வாரிசு என்பதால் திறமையாளர்களை புறக்கணிக்க முடியாது-ஸ்டாலின்
வாரிசு என்பதற்காக திறமையானவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டுமா என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

வடசென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமி, பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஆர்.டி.சேகர், ஆகியோரை ஆதரித்து பெரம்பூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், தான் செல்லுமிடமெல்லாம் கூடும் கூட்டம் வெற்றிக்கு கட்டியம் கூறுவதாகக் கூறினார்.
வேட்பாளர் தகுதியானவரா என்று விமர்சிக்கலாமே தவிர, யாருடைய மகன் என ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டாம் என அவர் குறிப்பிட்டார்.
தி.மு.க. ஆட்சியில் பாலம் கட்டியதில் ஊழல் என்று குற்றம் சாட்டிய அ.தி.மு.க.வால் அதை நிரூபிக்க முடியவில்லை என்றும், அவர் குறிப்பிட்டார்
புயலால் பாதிக்கபப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சார் தாமதமாகச் சென்றதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
பிரதமர் நரேந்திரமோடி, திட்டங்களுக்கு அடிக்கல் மட்டுமே நாட்டுகிற பிரதமராக இருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்.
