Connect with us

சூரியன் உதிக்குமா? இரட்டை இலை முளைக்குமா? மதுராந்தகத்தில் மல்லுக்கட்டும் திமுக-அதிமுக!

admk dmk

Tamil Nadu

சூரியன் உதிக்குமா? இரட்டை இலை முளைக்குமா? மதுராந்தகத்தில் மல்லுக்கட்டும் திமுக-அதிமுக!

சூரியன் உதிக்குமா? இரட்டை இலை முளைக்குமா? மதுராந்தகத்தில் மல்லுக்கட்டும் திமுக-அதிமுக!

சட்டமன்ற தேர்தல் வெற்றிக்குப் பின்பு ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற கட்சியாக வலம் வருகிறது திமுக. இதனால் நடக்க இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மீண்டும் மக்களை தன்வசம் ஆக இருப்பதற்காக அதிமுக அயராது பாடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் நம் தமிழ்நாட்டில் 19ஆம் தேதி நடக்க இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றையதினம் முதலே நடைபெற்று வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் திமுகவும் அதிமுகவும் வரிசையாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இந்த சூழலில் மதுராந்தகம் தொகுதியில் திமுக அதிமுக நேரடியாக போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளில் திமுகவும் அதிமுகவும் நேரடியாக மோதிக் கொள்கின்றன.

மதுராந்தகம் நகராட்சியில் மொத்தம் உள்ள 24 வார்டுகளில் திமுக, காங்கிரஸ், ம.ம.க மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா ஒரு வார்டு ஒதுக்கியுள்ளது. அதேவேளையில் மதுராந்தகம் நகராட்சியில் உள்ள அனைத்து 24 வார்டுகளிலும் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகள் போக எஞ்சியுள்ள வார்டுகளில் திமுகவும் அதிமுகவும் நேரடியாக மோதுகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top