வேட்பாளர் அறிவிப்பு: இடைத்தேர்தலில் மாவட்ட செயலாளரை நம்பிய தேமுதிக!!

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கட்சியாக காணப்பட்டது தேசிய முற்போக்கு திராவிட கழகம். ஏனென்றால் இந்த கட்சியை தொடங்கியவர் கேப்டன் விஜயகாந்த் ஆவார்.

சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் தேமுதிக போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது தொண்டர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்னும் சில நாட்களில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று தொண்டர்களிடையே பல்வேறு விதமான கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.

இதற்கு பதிலளிக்கும் வகையில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்திருந்தார். மேலும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தேமுதிகவின் வேட்பாளர் இவர்தான் என்று பிரேமலதா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் ஆனந்த் என்பவர் போட்டியிடுகிறார் என்று பிரேமலதா அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தை தான் தேமுதிக வேட்பாளராக அறிவித்துள்ளார் கட்சியின் பொருளாளர் பிரேமலதா.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.