ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் ஜோகோவிச் பங்கேற்க மாட்டார்! உறுதி செய்தது நீதிமன்றம்;

டென்னிஸ் உலகின் ஜாம்பவானான ஜோகோவிச் பற்றிய சில நாட்களாக ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது. ஜோகோவிச் விசாவை ஆஸ்திரேலிய அரசு ரத்து செய்திருந்தது. விசா ரத்து செய்ததை எதிர்த்த மனு தள்ளுபடி ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலிய அரசு இரண்டாவது முறையாக விசா ரத்து செய்ததை எதிர்த்து டென்னிஸ் சாம்பியன் ஜோகோவிச் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நோவக் ஜோகோவிச் இன் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது ஆஸ்திரேலியா உச்சநீதிமன்றம். ஜோகோவிச் இன் விசாவை ரத்து செய்த அரசின் முடிவை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தடுப்பூசி செலுத்தியதற்கான ஆதாரங்களை தராததால் ஜோகோவிச் வீசா ரத்து செய்யப்பட்டிருந்தது. மேல்முறையீடு மனு தள்ளுபடி ஆனாதால் ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேற்றப்பட உள்ளார். விசா ரத்து செய்ததுக்கு எதிரான மனு தள்ளுபடி ஆனதால் நாளை துவங்கும் ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் பங்கேற்க முடியாத நிலைமை உருவாகியுள்ளது.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நாளை முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் ரூபாய் 45 கோடி பரிசுத் தொகை கொண்ட ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் நாளை அதிகாலை 5:30 மணிக்கு தொடங்க உள்ளது.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரஃபேல் நடல், அலெக்சாண்டர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் நவோமி ஒசாகா, ஆஸ்லி பார்ட்டி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் என்றால் ரூபாய் 23.75 கோடியும் இரண்டாவது இடம் பிடித்தால் ரூபாய் 11.75 கோடியும் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் வெற்றி பெற்றாலே ரூபாய் 40 லட்சம் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...