தீபாவளி! பூக்களின் விலை கடுமையாக உயர்வு..!!

புதுக்கோட்டையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நாளை தீபாவளி பண்டிகையை கொண்டாட இருப்பதால் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் பூக்களின் விலையானது கிடுகிடுவென அதிகரித்து காணப்படுகிறது.

குறிப்பாக கடந்த வாரத்தை விட இந்த வாரம் 3 மடங்காக அதிகரித்து காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போப் செவ்வந்தி ஒரு கிலோ ரூ.130, கனகாம்பரம் ரூ.1000, முல்லை ஒரு கிலோ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோழி கொண்டை ரூ.50 என விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் மல்லிகைப்பூ விலை ரூ.1,500 என விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment