தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட் மிக்ஸர் எப்படி பண்ணனும் தெரியுமா

தீபாவளி ஸ்பெஷளாக வீட்டிலே ஸ்வீட் மிக்ஸர் பண்ணலாமா.. செய்முறை இதோ,

தேவையான பொருட்கள் :

கெட்டி அவல் – 200 கிராம்,
பொடித்த தூள் சர்க்கரை – 3 டீஸ்பூன்,
நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் – தலா 25 கிராம்,
வறுத்த வேர்க்கடலை – 2 டீஸ்பூன்,
நெய்யில் வறுத்த கொப்பரைத் துண்டுகள் – தேவைக்கு ஏற்ப ,
எண்ணெய் – 250 கிராம்,
நெய் – 2 டீஸ்பூன்.

தீபாவளிக்கு ஈஸியா வீட்டுலே ரவாலட்டு பண்ணலாமா! ரெசிபி இதோ!

செய்முறை:

அவலை சுத்தம் செய்து, எண்ணெயில் போட்டு நிறம் மாறாமால் பொரித்து கொள்ளவும், எண்ணெய் வடிகட்டியில் போட்டு எண்ணெய் நீக்கவும். 2 டீஸ்பூன் நெய்யில் பொடித்த சர்க்கரையை கரையவிட்டு அடுப்பை அணைத்து, அவல் உள்ளிட்ட மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு கிளந்து கொள்ளவும். ஸ்பெஷல் ஸ்வீட் மிக்ஸர் ரெடி.

தீபாவளிக்கு மறக்காம இந்த தீபாவளி லேகியம் மட்டும் செஞ்சு பாருங்க! வேற மருந்தே வேண்டாம்!

குறிப்பு: நெய் – சர்க்கரை கலந்த சூடான கலவையில் மற்றவற்றைப் போட்டால்தான் இனிப்பு சுவை நன்கு கிடைக்கும். இல்லாவிட்டால், மிக்ஸர் அவ்வளவு இனிப்பாக இருக்காது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment