தீபாவளிக்கு ஈஸியா வீட்டுலே ரவாலட்டு பண்ணலாமா! ரெசிபி இதோ!

தீபாவளிக்கு ஈஸியா ஸ்வீட்னா ரவாலட்டு தான் , எப்படி செய்வதுனு பாக்கலாம் வாங்க..

தேவையான பொருட்கள்.

வறுத்த ரவா- 250-கிராம்.
ஜீனி – 250-கிராம்
நெய் – 150 முதல் 200- கிராம்.
முந்திரிபருப்பு – 10, அல்லது 15
ஏலக்காய் – 5

உலர்ந்த அத்திப்பழம் தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இதோ !

செய் முறை

வெறும் கடாயில் ரவயை நன்கு வாசனைவரும் வரை (பொன்னிறமாக ) வறுத்து கொள்ளவும். ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும். நன்கு ஆறியதும் ரவையை தனியாக மிக்சியில் பொடித்து கொள்ளவும்.

அடுத்து ஜீனியையும் பொடிக்கவும்பொடித்தரவை, ஜீனியை நன்கு ஒரு சேர கலந்துவைக்கவும். ஏலக்காயை பொடிசெய்து மேலாக போடவும்.

முந்திரியை சிறிதளவு நெய்யில் சிவக்க வறுத்து அதையும் சேர்க்கவும். நெய்யை நன்கு சூடுபண்ணி ரவை, ஜீனிக்கலவையில் பரவலாக சுழற்றி ஊற்றவும்.

எல்லாவற்றையும் கரண்டி பயன் படுத்தி நன்கு கலந்து விடவும். பிறகு கை பொறுக்கும் சூட்டில் உருண்டைகளாக பிடிக்கவும். நெய்குறைவாக இருந்தால் உருண்டை பிடிக்கவராது உதிர்ந்துபோகும். சரியான அளவில் நெய் சேர்த்தால்தான் சுலபமாக உருண்டைகள் பிடிக்கவரும். அதில் மட்டும் கொஞ்சம் கவனம்தேவை.

கிராமத்து ஸ்டைல் வத்தல் குழம்பு! எப்படி செய்யனு தெரியுமா?

இந்த ரவா லட்டு நல்ல காற்றுபுகாத டப்பாக்களில் போட்டு வைத்தால் ஒருமாதம் வரையில் சுவையும் மணமும் மாறாமல் அப்படியே ப்ரெஷாக இருக்கும்.இந்த அளவுக்கு நிதான அளவில் 40-முதல் 50- லட்டுக்கள் வரை வரும்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment