தீபாவளி ஸ்பெஷல் – உருளைக்கிழங்கு குலாப் ஜாமூன் செய்முறை இதோ!

தீபாவளி என்றாலே இனிப்பு வகைகள் தான் நம் நினைவிற்கு வரும், அதிலும் குலாப் ஜாமூன் சொன்னாலே இனிக்கும்.குலாப் ஜாமூனை விரும்பாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். அந்த குலாப் ஜாமூனை வீட்டில் செய்வது எப்படி பார்க்கலாம். உருளைக்கிழங்கை வைத்து குலாப் ஜாமூன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் இதோ :

வேக வைத்து மசித்தது உருளைக்கிழங்கு – 1 கப்

மைதா – 3 மேஜைக்கரண்டி

பேக்கிங் சோடா – 1 சிட்டிகை

எண்ணெய்/நெய் – பொரிக்க

சிரப்புக்கு:

சர்க்கரை – 2 கப்

நீர் – 1 கப்

ரோஸ் வாட்டர் – சில துளிகள்

குங்குமப் பூ – 1 சிட்டிகை (தேவைப்பட்டால்)

kulop

செய்முறை:

உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துருவிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் துருவிய உருளைக்கிழங்கு, மைதாமாவு, பேக்கிங் சோடா சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்

பின்பு அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்

அடி கனமாக ஒரு பாத்திரத்தில் அடுப்பில் வைத்து சர்க்கரையை போட்டு நீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்பு அதனுடன் சில துளிகள் ரோஸ் வாட்டர், குங்குமப்பூ சேர்த்து அதனை தனியே வைக்கவும்.

பாத்திரத்‍தை அடுப்பில் வைத்து நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான தீயில் வைத்து உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

பொரித்த உருண்டைகளை சூடான சிரப்பில் போட்டு சில மணிநேரங்கள் ஊற வைத்த பின் பரிமாறவும்.

சூப்பரான உருளைக்கிழங்கு குலாப் ஜாமூன் ரெடி.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment