தீபாவளி ஸ்பெஷல் ஜிலேபி எப்படி செய்யனும் தெரியுமா?

தீபாவளி ஸ்பெஷலாக வீட்டிலே ஜிலேபி பண்ணலாமா… செய்முறை இதோ

தேவையான பொருட்கள்:

மைதா மாவு – கால் கிலோ,
சர்க்கரை – முக்கால் கப்,
கெட்டி தயிர் – 2 தேக்கரண்டி,
ரோஸ் எசன்ஸ் – 1 ஒரு தேக்கரண்டி,
சிவப்பு புட் கலர் – கால் தேக்கரண்டி,
உப்பு – ஒரு சிட்டிகை,
பொரிக்க தேவையான அளவு எண்ணெய்.

தீபாவளி சிறப்பு உணவுகள்

jilepiii

செய்முறை:

தயிருடன் உப்பு சேர்த்து கலக்கவும். இதனுடன் மைதா மாவு, சிவப்பு கலர் புட் சேர்த்து, வடை மாவு பதத்துக்கு பிசையவும். சர்க்கரை மூழ்கும் அளவுக்கு நீர் ஊற்றி, கம்பி பதத்துக்கு
பாகு காய்ச்சி இறக்கியவுடன், ‘எசன்ஸ்’ சேர்த்து கலக்கவும்.

கெட்டியான துணி அல்லது பாலிதீன் கவரின் நுனியில் சிறு துளை போடவும். வாணலியில் எண்ணெயை காய வைத்து, மாவை துணி அல்லது பாலிதீன் கவரில் போட்டு ஜிலேபி போல பிழிந்து, இருபக்கமும் வேக விடவும். பின், இதை பாகில் போட்டு ஊற வைத்து எடுக்கவும். சுவையான ஜிலேபி தயார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment