நெய் மைசூர்பாகுனு சொன்னா சிறியவர் முதல் பெரியவை வரை எல்லோருக்கும் பிடிக்கும். இந்த தீபாவளிக்கு வீட்டிலேயே நெய் மைசூர்பாகு எப்படி செய்யனு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கடலை மாவு – 100 கிராம்,
சர்க்கரை – 300 கிராம்,
நெய் – 200 கிராம் (வெண்ணெயைக் காய்ச்சி பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்).
உலர்ந்த அத்திப்பழம் தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இதோ !
செய்முறை:
அடிகனமான இரும்பு கடாயில் சர்க்கரையுடன் 50 மில்லி தண்ணீர் சேர்த்துக் கரையவிடவும். வேறொரு அடுப்பில் நெய்யை சூடு படுத்தி கொள்ளவும் . சர்க்கரை கரைந்து முத்து பாகு பதம் வந்தவுடன் ஒரு கை கடலை மாவு, சிறிது சூடான நெய் என ஒன்று மாற்றி மாற்றி சேர்த்து விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
பிரியாணி சைடிஸ் அருமையான கத்தரிக்காய் மசாலா செய்வது எப்படி?
கலவை பொற பொற என வருகையில் இறக்கி, நெய் தடவிய டிரேயில் கொட்டி, சிறிது சூடாக இருக்கையில் வில்லைகள் போடவும்.
குறிப்பு: கலவையில் சிறிது சமையல் சோடா சேர்த்தால், தேன் கூடுபோல் நல்ல பதத்தில் மைசூர்பாகு வரும்.