தீபாவளி ஸ்பெஷல் நெய் பால் கேக்! ஈஸியான செய்முறை !

தீபாவளி ஸ்பெஷலாக வீட்டிலேயே நெய் பால் கேக் செய்து அசத்தலாம் வாங்க…

தேவையான பொருட்கள்

நெய் – 3 தேக்கரண்டி
எழுமிச்சைசாறு – 2 தேக்கரண்டி
சர்க்கரை – ¾ கப்
பால் – 1½ லிட்டர்
அலங்கரிக்க – பாதாம், பிஸ்தா

milk cake

செய்முறை:

பாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு நான்ஸ்டிக் ஸ்டிக் கடாயில் ஒன்றரை லிட்டர் பாலை
ஊற்றி அதை மிதமான சூட்டில் கிட்டத்தட்ட இரண்டு
மணிநேரம் அடிப்பிடிக்காமல் கிளறி விட்டுக் கொண்டே
இருக்க வேண்டும்.

இரண்டு மணி நேரத்திற்கு பிறகு திரட்டுப்பால் போல்
பாலானது திரண்டு வரும். அதில் இரண்டு தேக்கரண்டி
எலுமிச்சை சாறு கலந்து மறுபடியும் கிளற வேண்டும்.
இப்பொழுது முக்கால் கப் சர்க்கரையை சிறிது சிறிதாக
கலந்து கிளற வேண்டும்.

பால் திரட்டானது சர்க்கரை சேர்த்தவுடன் இளகி
மறுபடியும் கெட்டியாகும் வரை தொடர்ந்து கிளற வேண்டும்.
இப்பொழுது நெய்யையும் ஊற்றி கிளற, கிளற நன்கு
திரண்டு வரும். பின்பு ஒரு ட்ரேயில் நெய் தடவி இந்தப்
பால் திரட்டை அதில் கொட்டி சமப்படுத்தி வைக்க
வேண்டும்.

இந்த கலவையை அறை வெப்பத்திலேயே நன்கு
ஆறவிட்டு விட வேண்டும். நன்கு ஆறிய பின்பு இவற்றை
வேண்டிய வடிவத்தில் துண்டுகள் போட்டு அதன் மேல்
பாதாம், பிஸ்தா வைத்து அலங்கரிக்கலாம்..

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment