தீபாவளி ஸ்பெஷல் சுவையான லட்டு வகைகள்..

பூந்தி லட்டு

தேவையான பொருட்கள் :

கடலை மாவு – ஒரு கிலோ
சர்க்கரை – 1அரை கிலோ
பாதாம் பருப்பு – 5 கிராம்
கிஸ்மிஸ் – 5 கிராம்
உணவு கலர் – சிறிது
நெய் – தேவையான அளவு

செய்முறை :

கடலை மாவை நன்கு சலித்து தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ள வேண்டும். கரைத்த மாவில் தேவையான நிற உணவு கலர் சேர்க்க வேண்டும். வாணலியில் நெய் விட்டு அது சூடாக்கவும் பூந்தி போட்டு எடுக்க வேண்டும். சர்க்கரையை ஓர் இழைப்பாகாக தயாரித்துக் கொள்ள வேண்டும். தயாரித்த இழைப்பாகில் பூந்தி ஆறுவதற்கு முன்பாக கிஸ்மிஸ், பாதாம் பருப்பு கலந்து உருண்டை களாக உருட்டிவிட வேண்டும். ஆறிவிட்டால் உருட்ட வராது. பூந்தியாக இருந்துவிடும்.

ladduu

அவல் லட்டு

தேவையான பொருட்கள் :

அவல் – அரை கிலோ
சர்க்கரை – அரை கிலோ
ரோஸ்வாட்டர் – சிறிது
நிலக்கடலை பருப்பு – 100 கிராம்

செய்முறை :

அவலை தண்ணீரில் கொட்டி நன்கு அலசி அசுத்தங்களை எல்லாம் கழுவி நீக்கவும். சிறு கற்களும் இல்லாதபடி சுத்தம் செய்ய வேண்டும். இப்படிச் சுத்தம் செய்தான பிறகு வெயிலில் துணியை விரித்து அதன் மேல் அவலை பரவலாகப் பரப்பி உலர்த்த வேண்டும். நிலக்கடலைப் பருப்பை வறுத்து மேல் தோலை நீக்கி சுத்தம் செய்துகொள்ளவும். சர்க்கரையை பாகு காய்ச்சி அதில் முதலில் அவலைப் போட்டு கிளற வேண்டும். பிறகு நிலக்கடலைப் பருப்பைச் சேர்த்து கிளற வேண்டும். கடைசியாக ரோஸ் வாட்டரைச் சேர்த்து நன்கு கிளற வேண்டும். அடுப்பை விட்டு இறக்கி சூடு முழுமையாக ஆறும் முன்பாகவே உருண்டைகளாக உருட்டவும்.

பால்கோவா லட்டு

தேவையான பொருட்கள் :

பால்கோவா – ஒரு கிலோ
சர்க்கரை – 750 கிராம்
முந்திரிப் பருப்பு – 50 கிராம்
திராட்சை – 25 கிராம்
மைதா – 3 மேஜைக்கரண்டி
ஏல அரிசிதூள் – ஒரு தேக்கரண்டி
ரோஸ் எசன்ஸ் – அரை தேக்கரண்டி
நெய் – தேவையான அளவு

பரங்கிக்காய் அல்வா செய்வது எப்படி?

செய்முறை :

சர்க்கரையுடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து அடுப்பிலேற்றி பாகு காய்ச்சவும். பால்கோவாவையும், மைதாவையும் ஒன்று கலந்து பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும். இப்படி உருட்டிய ஒவ்வோர் உருண்டையின் மேலும் ஒரு முழு முந்திரிப் பருப்பை திணிக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து நெய்யைவிட்டு கொதிக்கத் தொடங்கியதும் அதில் உருண்டைகளைப் போட்டுப் பொரித்து எடுத்துக் கொள்ளவும். இதை சர்க்கரைப் பாகில் போட்டு பாகில் ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும்.+

காரட் லட்டு

தேவையான பொருட்கள் :

காரட் – ஒரு கிலோ
ரவை – அரை கிலோ
கடலை மாவு – 20 கிராம்
பால்கோவா – அரை கிலோ
சர்க்கரை – ஒரு கிலோ
கிஸ்மிஸ் – 5 கிராம்
வாதுமை பருப்பு – 5 கிராம்
பிஸ்தா பருப்பு – 5 கிராம்
ஏலக்காய் – 5 கிராம்
குங்குமப்பூ – சிறிது
நெய் – தேவையான அளவு

செய்முறை :

ரவையை கடலை மாவுடன் கலந்து சிறிது நெய்விட்டுப் பிசைந்து பிறகு வெதுவெதுப் பான தண்ணீர் சேர்த்துப் பிசைந்து தனியே வைத்துவிட வேண்டும். காரட்டை தேங்காய் துருவியில் துருவி வாணலியில் சிறிது நெய்விட்டு துருவலை அதில் கொட்டி வதக்கிக் கொள்ள வேண்டும். ரவையையும், கடலை மாவையும் கலந்து சல்லடையில் சலித்துக்கொள்ள வேண்டும்.

பிறகு வாணலியில் சிறிது நெய்விட்டு அதையும் பொன்நிறமாகும்வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேங்காய் துருவலை மறுபடியும் வாணலியில் கொட்டி நெய்விட்டு வதக்கிக் கொண்டே அதோடு சிறிது சிறிதாக பால்கோவாவைச் சேர்க்க வேண்டும். சர்க்கரையையும், தண்ணீர் சேர்த்து ஒற்றை இழைப் பாகாகக் காய்ச்சி அதில் ரவை, பால்கோவா உள்ளிட்ட எல்லாவற்றையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்க வேண்டும். பருப்புகளையும் சேர்க்க வேண்டும். ஏலக்காயையும் தூள் செய்து சேர்க்க வேண்டும். ஆறியதும் லட்டுகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

பாசிப்பருப்பு லட்டு

தேவையான பொருட்கள் :

பாசிப்பருப்பு – ஒரு கிலோ
சர்க்கரை பொடி செய்தது – ஒரு கிலோ
நெய் – ஒரு கிலோ
குங்குமப்பூ – சிறிது
வாதுமைப் பருப்பு – தேவையான அளவு
பிஸ்தா பருப்பு – தேவையான அளவு
ஏலக்காய் – தேவையான அளவு

செய்முறை :

முதலில் பாசிப் பருப்பை தண்ணீரில் கொட்டி இரண்டு மணி நேரம் ஊறவிட வேண்டும். பிறகு நன்கு பிசைந்து கழுவி சுத்தம் செய்ய வேண்டும். பிறகு அதை உரலில் இட்டு நன்கு ஆட்ட வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து சிறிது நெய் விட்டு ஆட்டிய பாசிப்பருப்பை அதில் போட்டு பவுன் நிறத்தை அடையும்வரை புரட்டிக்கொண்டே இருக்க வேண்டும். பிறகு அதோடு வாதுமை பருப்பு, பிஸ்தா பருப்பை சேர்க்க வேண்டும். ஏலக்காயைத் தூள் செய்து பிறகு சேர்க்க வேண்டும். குங்குமப்பூவை சிறிது பாலில் கரைத்துச் சேர்க்க வேண்டும். கடைசியாக அரைத்த சர்க்கரையைக் கொட்டிப் பிசைந்து லட்டுகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment