தீபாவளி ஸ்பெஷல் 5 முறுக்கு வகைகள்! செய்முறை விளக்கம் இதோ!

புழுங்கலரிசி முறுக்கு

தேவையானவை பொருட்கள்:
புழுங்கலரிசி – 4 கப்,
பொட்டுக்கடலை மாவு – ஒரு கப்,
சீரகம் – அரை டீஸ்பூன், எள் – 2 டீஸ்பூன்
வெண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்,
ஊற வைத்த பாசிப்பருப்பு – ஒரு கைப்பிடி,
மிளகு – அரை டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும்
செய்முறை:

புழுங்கலரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து கிரைண்டரில் நைஸாக அரைக்கவும். அதில்
பொட்டுக்கடலை மாவு, சீரகம், மிளகுத்தூள், எள், ஊற வைத்த பாசிப்பருப்பு, வெண்ணெய், உப்பு சேர்த்து பிசையவும்

வெள்ளை துணியின் மீது ஒரு டம்ளரை கவிழ்த்து வைத்து, அதில் பிசைந்து வைத்த மாவில் சிறு எடுத்து, டம்ளரை சுற்றி கையினால் முறுக்கு சுற்ற வேண்டும். சுற்றிய முறுக்குகள் ஈரம் காய்ந்ததும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

சீரகம், மிளகுத்தூளுக்கு பதிலாக மிளகாய்த்தூள் சேர்த்தும் செய்யலாம்.

பச்சரிசி கார முறுக்கு

தேவையானவை:
பச்சரிசி மாவு – 4 கப்,
பொட்டுக்கடலை மாவு – ஒரு கப், உப்பு,
மிளகாய்த்தூள், தண்ணீர்,
எண்ணெய் – தேவையான அளவு,
பெருங்காயத்தூள் – சிறிதளவு.

செய்முறை:
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 4 கப் தண்ணீர் ஊற்றவும். அதில் உப்பு போட்டு, மெதுவாக
கொதிக்க ஆரம்பிக்கும்போது அரிசி மாவை கொட்டி, அடுப்பிலேயே வைத்துக் கிளறி, பின்னர் அடுப்பை
அணைத்து விடவும்.

இந்த மாவை தட்டில் போட்டு பிசைந்து, சூடு ஆறியதும் பொட்டுக்கடலை மாவு, மிளகாய்த்தூள் சேர்த்துப்
பிசையவும்.இந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு, காய்ந்த எண்ணெயில் பிழிந்து சுட்டெடுக்கவும்.

mur

தேங்காய்ப்பால் முறுக்கு:

தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – 2 கப், உளுத்தம்பருப்பு மாவு – 2 கப், வெண்ணெய் – 2 டீஸ்பூன்,
தேங்காய்ப்பால் – ஒரு கப், சீரகம், மிளகு – தலா அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
உளுத்தம்பருப்பை வெறும் கடாயில் வறுத்து மாவாக பொடிக்கவும். இதனுடன் அரிசி மாவு,
தேங்காய்ப்பால், உப்பு, பொடித்த மிளகு, சீரகம், வெண்ணெய் சேர்த்துப் பிசையவும்.
முறுக்கு அச்சில் மாவைப் போட்டு ஈரத்துணி மீது அல்லது பாலித்தீன் ஷீட்டில் சிறு சிறு முறுக்குகளாகப்
பிழியவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முறுக்குகளை போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

தேங்காய் எண்ணெயில் பொரித்தால் சுவையும் மணமும் அமோகமாக இருக்கும்.

நெய் முறுக்கு

தேவையானவை: பச்சரிசி மாவு – ஒரு கப், கடலை மாவு – கால் கப், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்,
வெண்ணெய் – நெல்லிக்காய் அளவு, நெய் – 4 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

பச்சரிசியை ஊற வைத்து இடித்து, சலித்து, காய வைத்துக் கொள்ளவும். இந்த மாவுடன் கடலை

மாவு, உப்பு வெண்ணெய், நெய், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். அதில் தேவையான தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்துக்குப் பிசையவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, அதனுடன் வாசனைக்கு சிறிது நெய்யும் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், முள்

முறுக்கு அச்சில் மாவைப் போட்டுப் பிழியவும். வெந்தவுடன் எடுக்கவும்.

கை முறுக்கு

தேவையானவை: பிசுக்குள்ள பச்சரிசி – 2 கப், உளுத்தம்பருப்பு – கால் கப், வெண்ணெய் – 6 டேபிள்ஸ்பூன், எள்
– ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
கை முறுக்கு சுற்ற பிசுக்குள்ள அரிசியாக இருந்-தால் நல்லது. அரிசியை தண்ணீரில் அரை மணி
நேரம் ஊற வைத்து கொள்ளவும். ஊறிய பிறகு வெள்ளைத் துணியில் முடிந்து வைத்து அதில் தண்ணீர் வடிந்து விடும்.

பிறகு அதை மிக்ஸியில் போட்டு மாவாக்கி நைஸாக சலிக்கவும். உளுத்தம்பருப்பை பொன்னிறமாக வறுத்து, அரைத்து சலித்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுந்து மாவு, எள், பெருங்காயத்தூள், உப்பு, வெண்ணெய் சேர்த்து பிசையவும்.

மாவு பதம் நன்றாக இருந்தால்தான் நன்றாக முறுக்கு சுற்ற முடியும். வெள்ளைத் துணி மேல் ஒரு பாட்டில்

மூடியை வைத்து, அதைச் சுற்றி முறுக்கு சுற்றவும்.

கடாயில் எண்ணெய் காய்ந்ததும், அதில் ஒவ்வொரு முறுக்காக மெதுவாக எடுத்து நிதானமாக போடவும்.

முதலில் சடசடவென சத்தம் வரும். ஒரு பக்கம் வெந்ததும், முறுக்குகளைத் திருப்பிப் போட வேண்டும். வெந்த

முறுக்கு எண்ணெயில் மிதக்கும். சடசட சத்தம் அடங்கியதும், எண்ணெயை வடிய விட்டு முறுக்கை எடுக்கவும்.

தேங்காய் எண்ணெயில் செய்தால் மொறு மொறுப்பாகவும், மணமாகவும் இருக்கும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment