Connect with us

தீபாவளிக்கு அடுத்த நாளும் விடுமுறை! கொண்டாட்டத்தில் புதுச்சேரி அரசு ஊழியர்கள்!!

தீபாவளிக்கு

News

தீபாவளிக்கு அடுத்த நாளும் விடுமுறை! கொண்டாட்டத்தில் புதுச்சேரி அரசு ஊழியர்கள்!!

தீபாவளி பண்டிகை நாளை தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான பணிகளை ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பாக செயல் படுத்தப்படுகின்றன. தீபாவளி பண்டிகைக்காக ஒவ்வொரு மாநில அரசும் தங்கள் மாநிலங்களில் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர்.புதுச்சேரி

குறிப்பாக ஒவ்வொரு மாநில அரசும் அம்மாநிலத்தில் விடுமுறை தினங்களை அறிவித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது புதுச்சேரியில் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 5ஆம் தேதி அரசு பொதுவிடுமுறை என்று புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் நவம்பர் 13ஆம் தேதி சனிக்கிழமை அரசு  அலுவலகங்கள் இயங்கும் என்று புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு தொடர்ந்து ஆறு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து விடுமுறை புதுச்சேரி மாநில அரசு அறிவிப்பதால் அந்த மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த கொண்டாட்டத்தில் இந்த தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top