தீபாவளிக்கு மறக்காம இந்த தீபாவளி லேகியம் மட்டும் செஞ்சு பாருங்க! வேற மருந்தே வேண்டாம்!

தீபாவளி சொன்னாலே நம்ம நினைவுக்கு வருவது பலகாரங்கள் தான். நிறைய இனிப்புகள் கார வகைகளை ஒன்றாக சாப்பிடுவதால் ஏற்படும் வயிறு உப்புசம், அஜுரணம் போன்றவற்றை கட்டுப்படுத்தும் கை மருந்து இந்த தீபாவளி லேகியம். இந்த லேகியம் எப்படி செய்யனு தெரியுமா.. இதோ பாருங்க

தேவையான பொருட்கள்

இஞ்சி (இளசு) – 250 கிராம்
வெல்லம் – 1/2 கப்
தேன் – 1/4 கப்
நெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி – சிறிதளவு
தனியா பொடி – 2 டீஸ்பூன்
சீரகப்பொடி – 1 டீஸ்பூன்

கிராமத்து ஸ்டைல் வத்தல் குழம்பு! எப்படி செய்யனு தெரியுமா?

செய்முறை

இஞ்சியை நன்றாக கழுவி தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும், சிறிது தண்ணீர் சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ளவும். வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி சுத்தம் செய்த பிறகு திரும்பவும் காய்ச்ச வேண்டும்.

நன்றாக நுரைத்து கம்பி பதத்திற்கு வரும்பொழுது அரைத்த இஞ்சி விழுதை சேர்த்து மிதமான தீயில், கைவிடாது கிளறிக்கொண்டே இருக்கவும் . 2 நிமிடங்களுக்கு பிறகு மஞ்சள் பொடி, தனியா பொடி, சீரகப்பொடி சேர்த்து கிளறவும்.

உலர்ந்த அத்திப்பழம் தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இதோ !

6, 7 நிமிடங்கள் கிளறியபின் வாணலியில் ஒட்டாமல் கெட்டியாக வரும். அந்த நேரத்தில் நெய் சேர்த்து 2 நிமிடங்கள் கிளறி இறக்கவும். நன்றாக ஆறியப்பிறகு தேன் சேர்த்து நன்றாக கிளறி கைபடாத ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்துக்கொள்ளலாம். கைப்படாமல் இருந்தால் எளிதில் கெடாது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment