தீபாவளியை பண்டிகை: மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!!

தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இன்று முதல் 22ம் தேதி வரையில் 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை இரவு 10 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற திங்கட்கிழமை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக சென்னை வாசிகள் பலர் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் அக்டோபர் 20, 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் மாலை நெரிசல்மிகு நேரங்களில் கூடுதல் மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரீ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே அன்றைய தினங்களில் இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டு, சுமார் 10 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேற்கண்ட நேரங்களில் பயணிகள் அனைவரும் தங்களது பயனத்தைத் திட்டமிடுதல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment