கவர்மெண்ட் வேலைக்காரர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!!

தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. இதில் முதல்வராக உள்ளார் மு கஸ்டாலின். தமிழகத்தில் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார்.ஸ்டாலின்

அதன் வரிசையில் தற்போது தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்தார் நம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்.

சி, டி பிரிவு தொழிலாளர் பணியாளர்களுக்கு 10% வரை போனஸ் வழங்கப்படும் என்று தமிழகத்தின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்தார். லாபம், நட்டம் அடைந்த அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி,டி பிரிவினருக்கு போனஸ் வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

2,87,750 தொழிலாளர்களுக்கு 216.38 கோடி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்தார்.

8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகை என 10 சதவீதம் வரை வழங்க தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment