#Breaking சற்று முன் ஆரம்பம்; அரசு விரைவு பேருந்துகளில் தீபாவளி முன்பதிவு தொடக்கம்!

தீபாவளி பண்டிக்கைக்காக வெளியூர் செல்பவர்களுக்கான அரசு விரைவு பேருந்து முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 24ம் தேதி தொடங்க உள்ள நிலையில், தொழில் மற்றும் வேலைவாய்ப்புக்காக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசித்து வரும் லட்சக்கணக்கான மக்கள் தீபாவளியை கொண்டாட பயணத்தை திட்டமிட்டு உள்ளனர்.

இந்நிலையில் அரசு விரைவு பஸ்களில் தீபாவளி முன்பதிவு நாளை (21-ந் தேதி) முதல் தொடங்குகிறது. 30 நாட்களுக்கு முன்னதாக அரசு விரைவு பஸ்களுக்கு முன்பதிவு செய்யக் கூடிய வசதி உள்ளது. அதன்படி அக்டோபர் 22-ந்தேதி பயணம் செய்ய இன்று முதல் முன்பதிவு தொடங்கியுள்ளது. www.tnstc.com என்ற இணைய தளம் வழியாக முன்பதிவு செய்யலாம்.

தீபாவளி பயணத்திற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது. பயணிகளின் முன்பதிவை பொறுத்து மேலும் 1000-க்கும் மேற்பட்ட பஸ்களுக்கு முன்பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய 6 போக்குவரத்து கழகங்களில் இருந்து பஸ்கள் பெறப்பட்டு முன்பதிவில் இணைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment