தெய்வசக்தி அளிக்கும் புனுகு

458ce1f806509609795e8445e582d6de-1

புனுகு பற்றிய ஆன்மீக உண்மைகள்

எந்த ஒரு தெய்வத்தை வழிபட வேண்டும் என்றாலும் அதற்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்ய வேண்டும்.பூஜை அபிஷேகம் ஆராதனையின் முடிவில் கண்டிப்பாக அன்னதானம் செய்ய வேண்டும்.

விநாயகரில் ஆரம்பித்து ஆஞ்சநேயர் வரை இருக்கும் அனைத்து தெய்வங்களுக்கும் தினசரி புனுகு சாத்தும் பழக்கம் போன நூற்றாண்டு வரை இருந்து வந்தது. அதனால் நமது நாடு முழுவதும் மக்கள் ஆழ்ந்த மன நிம்மதியோடு தினசரி வாழ்க்கையை நடத்தினார்கள்.

ஒவ்வொரு தேய்பிறை சதுர்த்தி திதி வரும்போதும் ராகு காலம் அல்லது குளிகைகாலத்தில் விநாயகருக்கு புனுகு சாத்தி வழிபட வேண்டும்.

குறைந்தது மாதம் ஒரு முறை வீதம் ஐந்து ஆண்டுகள் இடைவிடாமல் யார் விநாயகருக்கு புனுகு சாத்தி வழிபடுகிறார்களோ அவருக்கு விநாயகப்பெருமானின் அனுக்கிரகம் கிடைத்து அவர் ஆன்மீகத்தில் அடுத்த நிலைக்கு முன்னேறி விடுவார். தேய்பிறை சதுர்த்தி தவிர தேய்பிறை சிவராத்திரி திதியில் விநாயகருக்கு அபிஷேகமும் புனுகு சார்த்தும் பூஜையும் செய்யலாம்.

செவ்வாய் கிரகத்தின் அதிதேவதையான முருகக் கடவுளுக்கு தேய்பிறை சஷ்டி திதி வரும் நாளில் செவ்வாய் ஓரை அல்லது ராகு காலம் அல்லது குளிகை காலத்தில் புனுகு அணிவிக்க வேண்டும்.

அது தவிர செவ்வாய்க் கிழமைகளில் காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் அல்லது மதியம் ஒரு மணிக்கு மேல் இரண்டு மணிக்குள் அல்லது இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் புனுகு சாத்தும் பரிகாரம் பல நூற்றாண்டுகளாக நம்முடைய தமிழ்நாட்டில் இருந்து வந்தது.

மாநிலத்தின் காவல் தெய்வம் மகா வராகி என்று புறநானூறு தெரிவிக்கின்றது.புறநானூறு காலத்தில் மாநிலம் என்பது நமது பாரத நாடு முழுவதையும் குறிக்கும்.

தினமும் வராகிமாலை ஜெபித்து வருவதன் மூலமாக மாந்திரீக பிரச்சினைகள் நம்மையும் நமது குடும்பத்தையும் நமது வேலை அல்லது தொழிலையும் சிறிதும் பாதிக்காது.

அசைவ உணவு உண்ணும் பழக்கத்தையும் மது அருந்தும் பழக்கத்தையும் கைவிட்டு இருக்கவேண்டும்.

ஒவ்வொரு தேய்பிறை பஞ்சமி திதி அன்றும் சப்தகன்னியர் சன்னதியில் இருக்கும் வராகி தாய்க்கு புனுகு அணிவிக்க வேண்டும். புனுகு அணிவித்த பிறகு கூட்டாக பலபேர் சேர்ந்து வராகி மாலை பாராயணம் செய்ய வேண்டும்.

மிகவும் கொடூரமான ஜின் மாந்திரீகத்தால் தமிழ்நாடு முழுவதும் பலர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். தினமும் வராகிமாலை ஜெபித்து வருவதன் மூலமாக ஜின் மாந்திரீக பாதிப்பு முழுமையாக விலகிவிடும்.

முருகக் கடவுளுக்கு புனுகு சாத்துவது மூலமாக வீடு மனை சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக விலகி விடும். ரத்தம் சார்ந்த நோய்கள் வராது. உடன் பிறந்த சகோதர சகோதரர்களுடன் எப்போதும் நல்லுறவு இருக்கும்.

எதற்கெடுத்தாலும் பயப்படும் குணம் படிப்படியாக விலகிச் சென்றுவிடும்.

ராகு மகா திசை நடப்பவர்கள் மற்றும் ராகு நட்சத்திரங்களான திருவாதிரை சுவாதி சதயம் ஒன்றிலிருந்து வாழ்ந்து வருபவர்கள் அனைவரும் வாழ்நாள் முழுவதும் துர்க்கை அல்லது வராகியை தினமும் ஜெபித்து வருவது அவசியம். விஷ்ணு துர்க்கை , வனதுர்க்கை, மகா துர்க்கை என்று பல்வேறு விதமான துர்க்கை அவதாரங்கள் உண்டு.

துர்க்கையின் அவதாரங்கள் எதுவாக இருந்தாலும் துர்க்கையின் அனுக்கிரகம் பெற விரும்புபவர்கள் தேய்பிறை சப்தமி திதி அன்று துர்க்கைக்கு அணிவித்து அபிஷேகம் செய்து பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து அன்னதானம் செய்ய வேண்டும். மாதம் ஒரு தேய்பிறை சப்தமி என்று தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் வரை இடைவிடாமல் இவ்வாறு துர்க்கை வழிபாடு செய்து வருவதன் மூலமாக வளமான மற்றும் நிம்மதியான வாழ்க்கை துர்க்கையின் அருளால் கிடைக்கும்.

ஒன்பது கிரகங்களும் கால தேவன் என்ற காலபைரவரின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. காலபைரவர் தேய்பிறை அஷ்டமி அன்று ஈசனின் அருளால் உதயமானார். தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் நாளில் வரும் ராகு காலம் அல்லது குளிகை காலம் வரும்போது பைரவருக்கு புனுகு அணிவித்து அபிஷேகம் அர்ச்சனை செய்ய வேண்டும்.

நம்முடைய கர்மவினைகளை வெகுவேகமாக குறைந்து நிம்மதியோடும் ,வளமோடும், ஆரோக்கியத்தோடும் வாழ விரும்பினால் பைரவர் ஜெபம் அல்லது வராகி ஜெபம் தினமும் செய்துவர வேண்டியது அவசியம்.

தேய்பிறை அஷ்டமி வரும் நாளில் இருக்கும் ராகு காலம் அல்லது குளிகை காலம் இருக்கும் நேரத்தில் கால பைரவருக்கு புனுகு அணிவித்தால் கர்ம வினைகள் குறையும் ;நிம்மதியான தினசரி வாழ்க்கை கிடைக்கும்;

தேய்பிறை அஷ்டமி வரும் நாளில் இருக்கும் ராகு காலம் அல்லது குளிகை காலம் வரும் நேரத்தில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு புனுகு அணிவிப்பதன் மூலமாக வருமானம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே செல்லும் ;எவ்வளவு பெரிய அளவில் கடன் இருந்தாலும் அது படிப்படியாக குறைந்து கடன் இல்லாத நிலை நமக்கு வந்து விடும்.

தேய்பிறை நவமி திதி வரும் நாளில் அமைந்திருக்கும் ராகு காலம் அல்லது குளிகை காலம் வரும் நேரத்தில் துர்க்கை அல்லது வராகி அல்லது மகேஸ்வரி அல்லது முத்துமாரி அல்லது செல்லியம்மன் அல்லது மாரியம்மாள் போன்ற உக்கிரமான பெண் தெய்வங்களை புனுகு அணிவித்து அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். வழிபாட்டின் முடிவில் கண்டிப்பாக அன்னதானம் செய்ய வேண்டும்.

இதன் மூலமாக நம்முடைய வாழ்க்கையில் எது நீண்டகால ஏக்கங்கள் இருக்கின்றதோ அவை அனைத்தும் படிப்படியாக தீர்ந்து விடும்.

சிலருக்கு தனது குழந்தைக்கு திருமணம் முடியவில்லையே என்ற ஏக்கம்

சிலருக்கு சொந்த வீடு அமையவில்லையே என்ற ஏக்கம்

சிலருக்கு பூர்விகச் சொத்து கிடைக்காமல் வழக்கு மற்றும் சண்டை சச்சரவு போன்றவைகளால் நிம்மதி இல்லாத வாழ்க்கை.

சிலருக்கு திருமணம் ஆகியும் சில வருடங்களுக்குள் குழந்தையின்மை ஒரு மிகப் பெரிய ஏக்கமாக இருக்கிறது.

சிலருக்கு போதுமான அளவு வருமானம் இல்லை போதுமான அளவு வருமானம் அதிகரிக்கவில்லை என்ற ஏக்கம்.

பலருக்கு எதற்கெடுத்தாலும் யாரைப் பார்த்தாலும் எப்போது பார்த்தாலும் பயம் பயம் பயம்

இவை அனைத்தும் தீர தேய்பிறை அஷ்டமி திதி வரும் நாளில் காலபைரவ பெருமானுக்கு தேய்பிறை பஞ்சமி மற்றும் தேய்பிறை நவமி வரும் நாட்களில் உங்கள் ஊரிலுள்ள உக்கிரமான பெண் தெய்வத்திற்கு புனுகு அணிவிக்க வேண்டும்.

தேய்பிறை ஏகாதசி திதிகள் வரும் நாட்களில் ராகு காலம் அல்லது குளிகை கால நேரத்தில் மகாவிஷ்ணுவின் அவதாரங்களான பெருமாள் ஸ்ரீ கிருஷ்ண பகவான் அல்லது ஸ்ரீ ஹயக்ரீவ பெருமான் அல்லது ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு அணிவித்து பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து அன்னதானம் செய்ய வேண்டும்.

தேய்பிறை பிரதோஷம் வரும் நாளில் நந்தி பகவானுக்கு புனுகு அணிவித்து அபிஷேகத்துக்கு தேவையான பொருட்கள் வாங்கித் தரலாம். இதன் மூலமாக சிவ கடாட்சம் பெருகும். குலதெய்வத்தின் அருளாசியும் நமக்கு வெகு விரைவில் கிடைக்கும்.

அம்மாவாசை அன்று சிவலிங்கம் மற்றும் நடராஜப்பெருமானுக்கு புனுகு அணிவித்து அபிஷேகம் செய்து வர நம்முடைய கர்மவினைகள் வெகுவிரைவில் குறையும் மனம் சார்ந்த பிரச்சனைகள் தீரும்.தெளிவான மனநிலை இருந்தால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய மனிதராக நம்மால் செயல்பட முடியும்.

பௌர்ணமி அன்று நள்ளிரவு 11 30 முதல் 12 30 க்குள் சாந்தமான பெண் தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்து அதன் முடிவாக புனுகு சாத்தி வர அம்பாள் கனவில் காட்சி தருவாள். ஸ்ரீ பார்வதி தேவி, ஸ்ரீ மகாலட்சுமி தேவி, ஸ்ரீ பத்திரகாளி தேவி, ஸ்ரீ சாந்த அங்காளபரமேஸ்வரி, ஸ்ரீ மகேஸ்வரி, ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி, ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி,ஸ்ரீதுர்க்கா பரமேஸ்வரி போன்ற பல்வேறு பெயர்களில் உள்ள சாந்தமான பெண் தெய்வங்களின் அனுகிரகம் பெற பௌர்ணமி பூஜை அன்று புனுகு சாத்தி அன்னையின் அருள் பெறலாம்.

சனிக்கிழமை அன்று காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் கால பைரவர் அல்லது ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு புனுகு அணிவித்து அர்ச்சனை செய்து அன்னதானம் செய்துவர ஆழ்ந்த நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்.

உங்களுக்கு பாதகம் உள்ள கிரகத்தின் திசை நடைபெற்று கொண்டு இருந்தால் அந்த கிரகத்தின் கிழமை அன்று அந்த கிரகத்தின் ஓரை வரும் நேரத்தில் நவகிரகம் இருக்கும் பழமையான ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அந்த கிரகத்திற்கு புனுகு அணிவித்து பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.

உங்களுக்கு பாதகம் தரும் சூரிய மகாதிசை நடைபெற்றுக் கொண்டு இருந்தால் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் அல்லது இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் நவக்கிரக சன்னதியில் இருக்கும் சூரியபகவானுக்கு புனுகு அணிவிக்க வேண்டும்.

பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.பூசாரிக்கு ரூபாய் 11 கண்டிப்பாகத் தட்சிணை தர வேண்டும்.

உங்களுக்கு பாதகம் தரும் சந்திர மகா திசை நடைபெற்றுக்கொண்டு இருந்தால் திங்கட்கிழமை அன்று காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் அல்லது இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் நவக்கிரக சன்னதியில் இருக்கும் சந்திர பகவானுக்கு புனுகு அணிவிக்க வேண்டும் பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.பூசாரிக்கு கண்டிப்பாக ரூபாய் 20 தட்சிணை தர வேண்டும்.

உங்களுக்கு பாதகம் தரும் குரு மகா திசை நடைபெற்று கொண்டு இருந்தால், வியாழக்கிழமை அன்று காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் அல்லது இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் நவக்கிரக சன்னதியிலுள்ள குருபகவானுக்கு புனுகு அறிவிக்க வேண்டும் .உங்கள் பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். இதன் மூலமாக குரு பகவானால் ஏற்படும் பாதகங்கள் பெருமளவு குறையும்.அர்ச்சகருக்கு தட்சினையும் கொடுக்க வேண்டும்.

உங்களுக்கு பாதகம் தரும் ராகு மகா திசை நடைபெற்று கொண்டு இருந்தால் , ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் (ராகு காலத்தில்) நவக்கிரக சன்னதியில் அமைந்திருக்கும் ராகு பகவானுக்கு புனுகு அணிவிக்க வேண்டும். உங்கள் பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். உங்கள் ஊரில் எனது கிராமத்தில் பழமையான ஆலயம் இல்லாதபட்சத்தில் துர்க்கை அல்லது உக்கிரமான பெண் தெய்வத்திற்கு இதே நேரத்தில் புனுகு அணிவித்து அர்ச்சனை செய்யலாம்.பூசாரிக்கு கண்டிப்பாக ரூபாய் 15 தட்சிணை தர வேண்டும்.

உங்களுக்கு பாதகம் தரும் புதன் மகாதசை நடைபெற்று கொண்டு இருந்தால் புதன்கிழமை அன்று காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் அல்லது இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் நவக்கிரக சன்னதியில் அமைந்திருக்கும் புதன் பகவானுக்கு புனுகு அணிவிக்க வேண்டும். உங்கள் பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.பூசாரிக்கு கண்டிப்பாக ரூபாய் 15 தட்சிணை தர வேண்டும்.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை நமது நாட்டிலேயே கலப்படம் இல்லாத தரமான புனுகு கிடைத்து வந்தது.தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து நமக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது.

நம் ஒவ்வொருவருடைய வீட்டிலும் ஒரு புனுகு சிறிது கண்டிப்பாக இருக்க வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews