Connect with us

கலங்கப்படுத்தும் செயல்! – ஓபிஎஸ்-க்கு நீதிபதி கடும் கண்டனம்!

ops

தமிழகம்

கலங்கப்படுத்தும் செயல்! – ஓபிஎஸ்-க்கு நீதிபதி கடும் கண்டனம்!

அதிமுக பொதுக்குழு வழக்கின் விசாரணையை நீதிபதி கிருஷ்ணன் ராமசாரி விசாரிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற இருந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணசாமி பொதுக்குழு நடைபெறுவதை தடைவிதிக்க மறுத்து வழக்கை தள்ளுபடி செய்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார். அப்போது பேசிய நீதிபதிகள் நீங்கள் இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தில் மட்டுமே நாட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் இந்த வழக்கை இரண்டு வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி கிருஷ்ணசாமி முன் பட்டியலிடப்பட்டு இருந்தது. இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதப்பட்டது. அதாவது விசாரணையை நீதிபதி கிருஷ்ணன் ராமசாரி விசாரிக்க கூடாது என தெரிவித்தார்.

இந்த சூழலில் நீதிபதி கிருஷ்ண ராமசாமி ஓபிஎஸ் தரப்பினரிடம் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். எதற்காக நீங்கள் நீதிபதியை மாற்ற சொன்னீர்கள்? எனவும் இத்தகைய செயல்பாடானது நீதிதுறையை கலங்கப்படுத்தும் செயல் என கூறியுள்ளார்.

பின்னர் இந்த வழக்கானது நாளைய தினத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நாளைய தினத்தில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாரி விசாரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top