Connect with us

உள்ளாட்சித் தேர்தல் சொன்னவுடனே திமுக கட்சியிலிருந்து அறிவிப்பு: நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

MK Stalin list

தமிழகம்

உள்ளாட்சித் தேர்தல் சொன்னவுடனே திமுக கட்சியிலிருந்து அறிவிப்பு: நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

உள்ளாட்சித் தேர்தல் சொன்னவுடனே திமுக கட்சியிலிருந்து அறிவிப்பு: நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

அடுத்த மாதம் 19ஆம் தேதி நம் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறும் என்றும் கூறப் படுகிறது.

அதோடு மட்டுமில்லாமல் நடக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தப்பட உள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்திருந்தார்.

இது தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகள் மத்தியில் குஷி அளிக்கும் தகவலாக காணப்படுகிறது. இந்த நிலையில் நாளைய தினம் தமிழகத்தை ஆளும் கட்சியாக உள்ள திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என்று கட்சியின் தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. காணொலி வாயிலாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 6 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top