மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: அண்ணாமலை கடும் எச்சரிக்கை..!!

பாஜக நிர்வாகிகள் எந்த ஒரு தவறு செய்தாலும், பிரச்சினைகளில் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை கட்சி நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த சில நாட்களாக பாகவினர் மத்தியில் பரபரப்பு நிலவி வருகிறது. அந்த வகையில் திருச்சி சூர்யாவிற்கும் பாஜகவின் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் டெய்சி சரணுக்கும் இடையிலான உரையால் ஆடியோவானது சோசியல் மீடியா முழுவதும் பரவி சர்ச்சைக்குள்ளானது.

மாண்டஸ் புயல்: தலைமை செயலாளர் ஆலோசனை!

இதன் காரணமாக சில தினங்களுக்கு முன் பாஜக உடனான உறவை முடித்துகொள்வதாக, அடுத்த தேர்தலில் பாஜக இரட்டை இலக்கை அடைய வேண்டும் என கூறி பாஜகவில் இருந்து விலகினார். இவரது முடிவானது பாஜக நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பாஜக தலைவர் அண்ணாமலை முன் நடைப்பெற்றது. அப்போது கூட்டத்தில் பேசிய அவர் பாஜக நிர்வாகிகள் எந்த ஒரு தவறு செய்தாலும், பிரச்சினைகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

தொடர்ந்து பேசிய அவர் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றியடைய வேண்டும் என்பதால் அனைத்து நிர்வாகிகளும் கட்சி பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.