
தமிழகம்
கலவரம் ஏற்பட்ட பள்ளியை ஆய்வு செய்ய மாவட்ட கல்வி அதிகாரி நியமனம்!!
கடந்த ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கணியாமூர் பகுதியில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பெரும் கலவரம் நடந்தது. இதனால் அந்த பள்ளியை பொதுமக்கள் பலரும் அடித்து , வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.
ஏனென்றால் அந்த பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அந்த வழக்கும் தற்போது உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டு வருகிறது.
மேலும் நேற்றைய தினம் தான் அந்த மாணவியின் உடல் மறுபரித பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி பள்ளியினை ஆய்வு செய்ய அதிகாரி நியமனம் செய்யப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
கள்ளக்குறிச்சி வன்முறை ஏற்பட்ட தனியார் பள்ளியில் ஆய்வு செய்ய மாவட்ட கல்வி அதிகாரியினை நியமனம் செய்தது பள்ளிக்கல்வித்துறை. அந்த பள்ளியில் படித்த மாணவர்கள் எவ்வாறு கல்வியை தொடர வேண்டும் அவர்களை எப்படி படிக்க வைக்கலாம் என்பது குறித்து மாவட்ட கல்வி அதிகாரி ஆய்வு செய்வார் என்றும் தெரிகிறது.
மாணவர்களின் சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை கிடைப்பதற்கான சிறப்பு முகாம் விரைவில் நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.
பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு அருகாமையில் உள்ள பள்ளிகளில் விரைவில் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்தது. பொதுத்தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்கு அந்த பள்ளி ஆசிரியர்களை கொண்டே பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறுகிறது.
