சேதமடைந்த நிலையில் உள்ள பள்ளி மற்றும் கழிவறை கட்டடங்களை இடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

நேற்றைய தினம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் தொடர்பாக பள்ளியின் நிர்வாகிகள் பலரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள பள்ளி கட்டடங்களை இடிக்க ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் உத்தரவு பிறப்பித்து வருகின்றனர். அதன்படி மதுரை மாவட்டத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள 200 பள்ளி கட்டடங்களை இடிக்க மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

120 பள்ளி கட்டடங்கள், 80 கழிவறை கட்டடங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளதால் முழு கண்காணிப்பு நடைபெறுகிறது என்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். சேதமடைந்த கட்டடங்கள் அருகே மாணவர்கள் செல்லாதவாறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி கட்டடங்களை இடிக்க அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆபத்தான நிலையில் உள்ள 100 பள்ளி கட்டடங்களை 20ஆம் தேதி முதல் இடிக்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தனியார் பள்ளிகளின் கட்டட தன்மையை உறுதி செய்ய குழு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கூறினார். மாவட்டத்தில் 1966 அரசு பள்ளி ,அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் 325 கட்டடங்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது என்றும் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment