குற்றால அருவிகளில் மூன்றுநாட்கள் குளிக்க தடை! மாவட்ட ஆட்சியர் உத்தரவு;

தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்று குற்றாலம். இது தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு பழைய அருவி, அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி என அருகில் எண்ணிக்கை அதிகமாக காணப்படும். இவை தென்மேற்கு மலையை ஒட்டி அமைந்துள்ளதால் சீசன் நேரங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும்.

தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் சீசன் நேரங்களில் 50 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் வந்து மகிழ்வர். இந்த நிலையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் குற்றால பயணிகளுக்கு குளிக்க தடை விதித்துள்ளார். அதன்படி டிசம்பர் 31ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை குற்றால சுற்றுலாப் பயணிகள் அங்கு உள்ள அருவிகளில் குளிக்க தடை என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.

கொரோனா மற்றும் ஒமைக்ரான் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டி பொதுமக்கள் அருவிகளில் குளிக்க தடை விதித்ததாகவும் தென்காசி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். எனவே பொதுமக்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment