அரிசிக்கு பதிலாக கேழ்வரகு!! முதற்கட்டமாக நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் விநியோகம்!!

நம் தமிழகத்தில் சட்டமன்றத்தில் இரண்டு நாட்களாக மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அதன்படி நேற்றைய தினம் நகராட்சி பேரூராட்சிகளில் மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது.

அதற்கு முந்தைய தினம் நீர்வளத் துறையின் சார்பில் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதம் ஆனது இன்றைய தினமும் தமிழகத்தில் சட்டப்பேரவையில் நடந்ததாக காணப்படுகிறது. இதில் பல்வேறு விதமான புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி அரிசிக்கு பதிலாக இரண்டு கிலோ கேழ்வரகு வழங்கும் திட்டம் முதல் கட்டமாக நீலகிரி தர்மபுரி மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அப்போது பேசிய அவர் உணவு தானியங்களை சேமிக்க 12 வட்ட செயல்முறை கிடங்குகள் ரூபாய் 54 கோடி மதிப்பீட்டில் நபார்டு நிதி உதவியுடன் கட்டப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சேலம், சிவகங்கை ,திருச்சி, அரியலூர், நாமக்கல், வேலூர், திண்டுக்கல், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்முறை கிடங்குகள் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் சங்கராபரணி கூறினார்.

ரூபாய் 90 கோடியில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் 220 கிட்டங்கிகள் ஆதாரங்களில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார். ரூபாய் 20 லட்சத்தில் சேமிப்பு கிடங்கு நிறுவன பணி நடைமுறைகளை எளிதாக்க மென்பொருள் மூலம் கணினி மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment