10 லட்சம் பனை விதைகள் விநியோகம்; பனைமரம் ஏறும் கருவிகளை கண்டுபிடித்தால் சிறப்பு விருது!!
தற்போது பல இயற்கை விவசாயிகள் நலிவடைந்து காணப்படுகிறது. அவற்றுள் ஒன்றுதான் பனை விவசாயம். இந்த பனை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் இன்று கூடிய சட்டப்பேரவையின் பட்ஜெட்டில் ஏதேனும் அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அந்தப்படி இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பனை விதைகள் விநியோகம் பற்றி சில அறிவிப்பினை கூறியிருந்தார். அதன்படி 10 லட்சம் பனை விதைகள் விநியோகம் செய்ய உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில மரமான பனை மரங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார். 10 லட்சம் பனை விதைகள் விநியோகம் செய்யப்படும் என்றும் அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.
மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பதற்கான உபகரணங்களை வாங்க 75 சதவீதம் மானியம் என்றும் அதற்கு ரூபாய் 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார்.
பனைமரம் ஏறும் சிறந்த கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கூறினார். கருப்பட்டி உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அதன் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு சிறப்பு மானியம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.
