ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு: அதிரடி அறிவிப்பு

a18a35bdf6468481bb4b8049494ba319

ரஜினி மக்கள் மன்றம் கலக்கப்படுகிறது என்றும், அரசியலுக்கு இனி வரப்போவதில்லை என்றும் முன்புபோல் ரஜினி ரசிகர் மன்றமாக மக்கள் நல பணிகளுடன் இயங்கும் என்றும் ரஜினிகாந்த் அதிரடியாக அறிவித்துள்ளார். இன்று 38 மாவட்ட செயலாளர்களுடன் கலந்து ஆலோசனை செய்த ரஜினிகாந்த் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ரஜினி மக்கள்‌ மன்ற நிர்வாகிகளுக்கும்‌, உறுப்பினர்களுக்கும்‌, என்னை வாழ வைத்த தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும்‌ வணக்கம்‌. நான்‌ அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு ரஜினி மக்கள்‌ மன்றத்‌தின்‌ பணி என்ன? நிலை என்ன? என்று மக்கள்‌ மன்ற நிர்வாகிகள்‌ மற்றும்‌ ரசிகர்கள்‌ மத்தியில்‌ கேள்விக்குறியாக இருக்கிறது அதை விளக்கவேண்டியது என்னுடைய கடமை.

நான்‌ அரசியல்‌ கட்சி‌ ஆரம்பித்து, அரசியலில்‌ ஈடுபட ரஜினிகாந்த்‌ ரசிகர்‌ நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள்‌ மன்றமாக மாற்றி, மாநில அளவிலும்‌, மாவட்ட அளவிலும்‌ பல பதவிகளையும்‌, பல
சார்பு அணிகளையும்‌ உருவாக்‌கினோம்‌.

காலச் சூழலால்‌ நாம்‌ நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்‌தில்‌ அரசியலில்‌ ஈடுபடப்போகும்‌ எண்ணம்‌ எனக்கில்லை, ஆகையால்‌ ரஜினி மக்கள்‌ மன்றத்தை கலைத்துவிட்டு, சார்பு அணிகள்‌ எதுவுமின்றி, இப்போதைக்கு ரஜினி மக்கள்‌ மன்றத்தில் உள்ள செயலாளர்கள்‌, இணை, துணை செயலாளர்கள்‌ மற்றும்‌ செயற்குழு உறுப்பினர்களுடன்‌ மக்கள்‌ நலப்பணிக்காக முன்பு போல ரஜினிகாந்த்‌ ரசிகர்‌ நற்பணி மன்றமாக செயல்படும்‌ என்று அன்புடன்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌.

வாழ்க தமிழ்‌ மக்கள்‌! வளர்க தமிழ்‌ நாடு!! ஜெய்ஹிந்த்‌!!!

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

7003cfa9f19cabc0f1913ed16ac987a0

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment