News
திமுகவுடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தி: மதிமுக நிர்வாகிகள்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தங்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு இருப்பதாக மதிமுக நிர்வாகிகள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திமுக கூட்டணியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்தது உறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் மதிமுக ஆகிய இரு கட்சிகளும் அடுத்தடுத்து பேச்சுவார்த்தைகள் நடத்தியும் இன்னும் முடிவு எட்டப்படாமல் உள்ளன
இந்த நிலையில் சற்றுமுன் திமுக அழைப்பின்பேரில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு மதிமுக நிர்வாகிகள் சென்றனர். ஆனால் திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து கருத்து தெரிவித்த மதிமுக நிர்வாகிகள் திமுகவின் நிலைப்பாட்டை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறினார். இருப்பினும் மீண்டும் திமுக அழைத்தால் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்
இந்த நிலையில் திமுக கூட்டணியில் போதுமான இடம் கிடைக்கவில்லை என்றால் தேர்தலில் போட்டியில்லை என்ற முடிவை எடுக்க மதிமுக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறதூ.
