Connect with us

தேர்தல்: சிசிடிவி பொருத்த கோரிய மனு தள்ளுபடி; நேரத்தை வீணடித்ததாக 5000 ரூபாய் அபராதம்!

CCTV cameras for vulnerable polling booths SECVPF

தமிழகம்

தேர்தல்: சிசிடிவி பொருத்த கோரிய மனு தள்ளுபடி; நேரத்தை வீணடித்ததாக 5000 ரூபாய் அபராதம்!

தேர்தல்: சிசிடிவி பொருத்த கோரிய மனு தள்ளுபடி; நேரத்தை வீணடித்ததாக 5000 ரூபாய் அபராதம்!

வருகின்ற சனிக்கிழமை தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு வாக்குச் சாவடிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பல பள்ளிகள் வாக்குச்சாவடிகளாக காணப்படுகின்றன.

இந்த நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் பட்டியலிடப்பட்டு அந்த வாக்குச் சாவடிகளில் மட்டும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளதாக  அறிவிப்பு அவ்வப்போது வெளியானது.

இந்த நிலையில் தேர்தல் நடத்தப்படும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி பொருத்த வேண்டும் என்று ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் சிசிடிவி பொருத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.

அதன்படி சென்னை மாநகராட்சியில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்த கோரிய மனு தள்ளுபடி ஆனது. தள்ளுபடி செய்ததோடு மட்டுமில்லாமல் அபராதத்தையும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விதித்தனர்.

ஏனென்றால் நீதிமன்ற நேரத்தை வீணடித்த மனுதாரருக்கு ரூபாய் 5,000 அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சிசிடிவி கேமரா பொருத்துவதை மாநில தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் ஹை கோர்ட் கூறியது. பதட்டமான வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணிக்கை மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top