சினிமா பாணியில் சிறைச்சாலையில் சம்பவம்; சிறைவாசிகளுக்கு உதவிய காவலர்கள் பணி நீக்கம்!
தற்போது பல சம்பவங்கள் சினிமாவில் நடக்கிறது போல உண்மையில் நடந்து கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக சிறைச்சாலை சம்பவங்கள் அனைத்தும் சினிமாவைப் போல காணப்படுகிறது.
ஏனென்றால் சிறைச்சாலையில் தண்டனை கைதிகள் செல்போன், கஞ்சா உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பயன்படுத்துவது. இதில் வேதனை என்னவென்றால் போலீசார் இதற்கு உதவி செய்வதும் குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் சிறைச்சாலையில் செல்போன் வினியோகம் செய்த காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செயல் மதுரை மத்திய சிறையில் நடந்துள்ளது.
அந்த படி மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு செல்போன், கஞ்சா வினியோகம் செய்த புகாரில் காவலர்கள் 2 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிறைக்காவலர்கள் செந்தில்குமார் விஷ்ணு குமாரை பணிநீக்கம் செய்து சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
சிறைவாசிகளுக்கு செல்போன் வழங்கி 100 முறைக்கு மேல் பேச வைத்துள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் தண்டனையில் உள்ள சிறைவாசிகளுக்கு உதவிய காவலர்கள் 2 பேர் பணி நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
