ஆன்லைன் தேர்வுக்கு தடைவிதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி! மனுதாரரே வாபஸ் கடிதம்;

தமிழ்நாட்டில் நேற்றைய தினம் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டது. கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு இருந்தபடி ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதனால் மாணவர்கள் மத்தியில் பெருத்த சந்தோசம் நிலவுகிறது. இந்த நிலையில் ஹைகோர்ட்டில் ஆன்லைன் தேர்வுக்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு தற்போது தள்ளுபடி ஆனது.

அதன்படி கல்லூரி பருவத் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த தடை விதிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். ராம்குமார் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆன்லைன் மூலமாக பருவத் தேர்வுகளை நடத்துவதால் மாணவ மாணவிகளின் கல்வித் தரம் வெகுவாக பாதிப்பதாக புகார் அளித்தார். ஆன்லைன் மூலமாக பருவத்தேர்வு நடத்தப் படுவதால் கல்வி நிறுவனங்களின் நம்பகத் தன்மை பாதிக்கப்படும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மனுவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக உயர்நீதிமன்றத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டதாக நீதிபதிகள் கூறினர். மனுதாரரே மனுவை வாபஸ் பெறுவதாக கடிதம் அனுப்பி வைத்தால் வழக்கு தள்ளுபடி ஆனது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment